இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஆதரவு தர முடியாது என்றும், அதற்கான ஒப்பந்தத்தை(123) ஏற்றால் மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், அரசியல் ரீதியான முக்கிய முடிவெடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று கூடுகிறது!
ஐ.மு.கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாதிகள் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை ஏற்றுக்கொண்டு 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதா? அல்லது மார்க்ஸிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகளின் ஆதரவிற்காக ஒப்பந்தத்தை கைவிடுவதா? என்பது முடிவு செய்யப்படும்.