பீகாரில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழைக்கு இதுவரை 223 பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலப் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பீகார் மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 223 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை வெள்ள சேதங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் டில்லி சென்றுள்ளார்.