Publish Date: Sat, 11 Aug 2007 (20:22 IST)
Updated Date: Sat, 11 Aug 2007 (20:22 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக, இடதுசாரிகளுடன் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளுக்கு இணக்கமாக தீர்வு காண்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!
அணு ஒப்பந்தப் பிரச்சனையில் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டால் தேர்தலைச் சந்திப்பீர்களா என்று செய்தியாளர்களிடம் கேட்டதற்கு, எதற்காக அப்படி யோசிக்கிறீர்கள். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மிக இணக்கமாகத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்தார்.
குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹம்மது ஹமீத் அன்சாரியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Webdunia
Publish Date: Sat, 11 Aug 2007 (20:22 IST)
Updated Date: Sat, 11 Aug 2007 (20:22 IST)