Publish Date: Sat, 11 Aug 2007 (15:32 IST)
Updated Date: Sat, 11 Aug 2007 (15:31 IST)
அசாம் மாநிலத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 6 சிறுவர்கள் உட்பட 12 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கர்பி ஆங்லான் மாவட்டத்தில் உள்ள டோலாமர் கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் ஹிந்தி மொழி பேசும் குடும்பத்தினர் வாழ்ந்து வரும் 4 வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக சுட்டதாகவும் இதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
படுகொலையை நிகழ்த்திய தீவிரவாதிகள் அந்த வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிவிட்டதாகவும், இந்த கொடுஞ்செயலை புரிந்தவர்கள் கர்பி லோங்ரி தேசிய வாதிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த 8ஆம் தேதி ஹபாராகாட் எனும் இடத்தில் இதேப்போல ஹிந்தி பேசும் மக்கள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
(வார்த்தா)
Webdunia
Publish Date: Sat, 11 Aug 2007 (15:32 IST)
Updated Date: Sat, 11 Aug 2007 (15:31 IST)