குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் இதுவரை 65 விழுக்காடு உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தி ஒத்திவைக்கப்பட்டதும், உறுப்பினர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பகல் 11 மணி நேர நிலவரப்படி 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி, அயலுறவுத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ ஆச்சார்யா, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் குருதாஸ் தாஸ் குப்தா, து. ராஜா ஆகியோர் வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
(வர்த்தா)