Publish Date: Tue, 07 Aug 2007 (10:09 IST)
Updated Date: Tue, 07 Aug 2007 (10:09 IST)
பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 50 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. 5000 க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சனஸ்டிப்பூர் மாவட்டம் ஹர்பூர், சைதாபாத் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மக்களை படகில் ஏற்றி வந்தனர். படகு பத்தார்கரையை நெறுங்கிக்கொண்டிருந்த போது தீடிரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் படகில் பயணம் செய்த 50 பேர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.