Publish Date: Sat, 04 Aug 2007 (12:52 IST)
Updated Date: Sat, 04 Aug 2007 (12:52 IST)
இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டதற்காக ஈரான் பிரச்சனையில் அமெரிக்கா கடைபித்து வரும் கொள்கையை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று இந்திய தூதர் ரோனன் சென் கூறியுள்ளார்.
அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்துள்ள போட்டியில் இவ்வாறு கூறியுள்ள அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரோனன் சென், ஓவ்வொரு ஓப்பந்ததையும் ஒரு பிரச்சனையோடு இணைத்து பார்ப்பது: இன்று ஈரான், நாளை வேறு பிரச்சனை: எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான 123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ரோனன் சென், இந்தியாவை போன்ற மிகப் பெரிய துடிப்பான நாடு அயலுறவு உள்ளிட்ட முக்கிய கொள்கைகளில் சுதந்திரமாக முடிவெடுக்கும் நடவடிக்கையை விட்டு தரும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாக நமக்கு மறுக்கப்பட்டு வந்த அணு தொழில் நுட்பமும், எரி பொருளும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ரோனன் சென் கூறினார்.
Webdunia
Publish Date: Sat, 04 Aug 2007 (12:52 IST)
Updated Date: Sat, 04 Aug 2007 (12:52 IST)