கடந்த இரண்டு நாட்களில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததையடுத்து காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் சுற்றுலா வந்த 2 பேருந்துகளில் வெடிகுண்டுகள் வெடித்தன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் குஜராத்தைச் சேர்ந்த 7 பேரும், நேற்று நடந்த குண்டு வெடிப்பில் பீகாரைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போதுதான் அமைதி திரும்பு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதனை சீர்குலைக்கும் வகையில் சுற்றலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதையடுத்தே, சுற்றுலா வந்த பேருந்துகளில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்பில் எவ்விதமான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய புதுடெல்லியில் இருந்து வெடிபொருள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாவின் மூலம் பொருளாதாரம் உயர்வதைத் தடுக்கவே பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், குண்டு வெடிப்புகளை தவிர்க்கவும் ஜம்மு-காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.