Newsworld News National 0707 30 1070730002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் பேருந்தில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

Advertiesment
காஷ்மீர் குண்டு வெடிப்பு மொஹல் பூங்கா

Webdunia

, திங்கள், 30 ஜூலை 2007 (10:27 IST)
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியாயினர்.

காஷ்மீர் மாநிலத்தில் ஷாலிமரில் உள்ள மொஹல் பூங்கா அருகே சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்த பேருந்தில் நேற்று திடீரென குண்டு வெடித்தது. பேருந்தில் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருந்த கம்பிரஸரில் ஏற்பட்ட கோளாரால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், வெடி பொருள்கள் வெடித்ததுதான் விபத்திற்கு காரணமாக இருக்க முடியும் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil