ஏர் இந்தியாவின் புதிய விமானங்களை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார்.
உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைக்காக ஏர் இந்திய விமானம் 111 விமானங்களை வாங்கி உள்ளது. இந்த விமானங்கள் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் பெறப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக பெறப்பட்ட 5 புதிய விமானக்களை முறைப்படி ஏர் இந்திய நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு புதிய விமானங்களை ஏர் இந்திய நிறுவனத்திடம் சேர்த்தார்.
இந்த புதிய விமானகளின் சேவை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்று சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பாட்டேல் தெரிவித்தார். மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு நேரடியாக இந்த விமானம் செல்வது குறிப்பிடதக்கதாகும்.