Publish Date: Thu, 26 Jul 2007 (12:16 IST)
Updated Date: Thu, 26 Jul 2007 (12:15 IST)
காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படையின் முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று காலை சுமார் 10 அளவில் மத்திய பாதுகாப்பு படை முகாம் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.