Publish Date: Tue, 24 Jul 2007 (11:20 IST)
Updated Date: Tue, 24 Jul 2007 (11:19 IST)
கட்சியின் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக குஜராத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேர் கட்சியில் இருந்து இடைக்கால நிக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர்களான கோர்க்கான், ஜடாபியா, பலுபாய்தாண்டி, பெசர்பாய் பதானி, பவுக்பாய் உகந்த், திருபாய் சுஜீரா ஆகிய 5 பேரையும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கட்சியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்திருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்தார்.
கட்சியின் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியில் நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வில்லை என்றால் அவர்களுக்கான கதவு மூடப்படும் என்றும் அவர் கூறினார்.