குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் பதவியை பைரோன் சிங் ஷெகாவத் இன்று ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் சுயேட்சையாக போட்டியிட்டார். நேற்று முன் தினம் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில் ஷெகாவத்தை விட ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து ஷெகாவத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
இந்நிலையில் ஷெகாவத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் அவர் தனது ராஜினாம கடிதத்தை நேரில் வழங்கினார்.