Publish Date: Sat, 21 Jul 2007 (12:43 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:02 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஐ.மு. -இடதுசாரிகள் வேட்பாளர் பிரதீபா பாட்டீல் துவக்கத்திலேயே முன்னிலைக்கு வந்துள்ளார்.
ஆங்கில எழுத்து வரிசையின்படி மாநில வாரியாக பதிவான வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. அதன்படி ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டதில் பிரதீபா பாட்டீல் 223 பேரவை உறுப்பினர்களின் முதல் வாக்குகளை பெற்றுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத்திற்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆந்திரத்தில் முக்கிய எதிர்கட்சியான தெலுங்கு தேசம், தேர்தலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பு 148 ஆகும். அதன்படி பிரதீபா பாட்டீல் 3304 வாக்குகளும், ஷெகாவத் 296 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Webdunia
Publish Date: Sat, 21 Jul 2007 (12:43 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:02 IST)