குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் 3 வது அணி சார்பில் போட்டியிடும் ரஷீத் மசூத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனிடையே, குடியரசுத் துணை தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தின் பதவிக் காலமும் முடிவடைவதால் அதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
தெலுங்கு தேசம், சமாஷ்வாடி, அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள 3 வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளாராக சமாஷ் வாடி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரஷீத் மசூத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.