Newsworld News National 0707 19 1070719004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குபதிவு துவங்கியது

Advertiesment
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குபதிவு

Webdunia

, வியாழன், 19 ஜூலை 2007 (11:34 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.

தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரி கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் பிரதீபா பாட்டீலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

வேறு யாரும் போட்டியிடாததால் இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்றத்தின் 62 -ம் அறை எண்ணில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அந்தந்த மாநில தலைநகரங்களில் உள்ள சட்டசபை வளாகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த மாநிலத்தில் உள்ள வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படுகிறது.

வருகிற 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil