Publish Date: Wed, 18 Jul 2007 (12:07 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:00 IST)
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை தொடங்குகிறார்.
குடியரசுத் தலைவர் பதவிலிருந்து ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்கு திரும்புவேன் என்று அப்துல் கலாம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது பதவிக்கலாம் வருகிற 24 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இதனையடுத்து, வருகிற 25 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கௌரவ பேராசிரியராக அப்துல் கலாம் பொறுப்பேற்கிறார். இதனை நேற்று அப்துல் கலாம் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர் என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.