Publish Date: Fri, 13 Jul 2007 (18:32 IST)
Updated Date: Fri, 13 Jul 2007 (18:31 IST)
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரு மருத்துவர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் இன்று அலோசனை நடத்தினார்.
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலைய தாகுதல் தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீப் கைது செய்யபட்டார். இவரை காவலில் எடுத்த ஆஸ்திரேலியா காவல் துறையினர் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.
அவருடைய காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் காவலில் எடுத்து விசாரிப்பதில்லை என்ற முடிவுக்கு ஆஸ்திரேலிய காவல் துறையினர் வந்துள்ளனர். இதனால் முகமது ஹனீப் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடரபாக டெல்லி சென்ற கர்நாடக முதல்மைச்சர் குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து பேசினார்.