காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கிரனேட் தாக்குதலில் இருந்து தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரின் மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, குப்வாரா மாவட்டத்தில் நடந்த பேரணியில் இன்று கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் ஹன்ட்வாரா பகுதியில் உள்ள கிரலிகண்டியில் என்ற இடத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது திடீரென தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உமர் ஆப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிகப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உமர் அப்துல்லா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை