Publish Date: Mon, 09 Jul 2007 (16:44 IST)
Updated Date: Mon, 09 Jul 2007 (16:44 IST)
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று அன்று மாலையே வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 23 ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனுக்கள் திரும்பப்பெற ஜூலை 26 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்று அன்று மாலையே வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வருகிற 19 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடதுசாரி கட்சிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.
Webdunia
Publish Date: Mon, 09 Jul 2007 (16:44 IST)
Updated Date: Mon, 09 Jul 2007 (16:44 IST)