Publish Date: Sat, 07 Jul 2007 (20:21 IST)
Updated Date: Sat, 07 Jul 2007 (20:21 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜஸ்வந்த் என்ற அணை உடைந்ததில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் ஜஸ்வந்த் என்ற பழமையான அணை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
ஜஸ்வந்த் சாகர் அணைக்கு அதிக அளவில் வெள்ளம் வந்ததால் அணை உடைந்தது. இதனால் அங்கிருந்த தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இதில் ஜோத்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புகுந்ததால் அங்குள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அங்கிருந்த மக்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.