Publish Date: Thu, 05 Jul 2007 (18:02 IST)
Updated Date: Thu, 05 Jul 2007 (18:00 IST)
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூலை 23 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடை நாள் என்றும், ஜூலை 24 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 26 ஆம் தேதி கடைசி நாள் என்றும், தேர்தல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அதிகாரபூர்வமன அறிவிப்பு ஜூலை 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Thu, 05 Jul 2007 (18:02 IST)
Updated Date: Thu, 05 Jul 2007 (18:00 IST)