Publish Date: Tue, 03 Jul 2007 (20:13 IST)
Updated Date: Tue, 03 Jul 2007 (19:55 IST)
அமர்நாத் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக கற்கள் உருண்டு விழுந்ததில் காயமுற்று யாத்திரிகர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!
காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை பகுதியில் கற்கள் உருண்டு விழுவதாகவும், அதில் ஒரு யாத்திரிகர் கொல்லப்பட்டது மட்டுமின்றி மேலும் 8 பேர் காயமுற்றதால் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக காஷ்மீர் அரசு அதிகாரிகள் யு.என்.ஐ. செய்தியாளரிடம் கூறியுள்ளனர்.
உயிரிழந்த யாத்திரிகரின் பெயர் தேவிதி பாரதி. அஸ்ஸாமைச் சேர்ந்தவர்.
காயமுற்ற அனைவரும் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். (யு.என்.ஐ.)