Newsworld News National 0707 02 1070702015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தி கடிதம் ஏலம்: வாபஸ் பெற்றது லண்டன் நிறுவனம்

Advertiesment
காந்தி கடிதம் வாபஸ்

Webdunia

, திங்கள், 2 ஜூலை 2007 (19:48 IST)
மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் விடும் திட்டத்தை லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்படுவடுதற்கு 19 நாட்களுக்கு முன்னதாக ஹரிஜன் பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். லண்டனில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனம் இந்தக் கடிதத்தை நாளை ஏலத்தில் விடப்போவதாக அறிவித்தது.

மத்திய அரசு, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டது காந்தி கடிதத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டது. அதன் மூலம், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, மகாத்மா காந்தியின் கடிதம் ஏலம் விடப்படும் திட்டத்தை கிறிஸ்டி நிறுவனம் இன்று வாபஸ் பெற்றுக் கொண்டது. இத்தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil