Publish Date: Mon, 02 Jul 2007 (13:50 IST)
Updated Date: Mon, 02 Jul 2007 (13:46 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்திரபிரதேச மாநில அரசு போருந்து ஒன்று கோராக்பூரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து ஷக்ஜஹன்பூர் மாவட்டத்தில் உள்ள திஹார் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பரைலியில் இருந்து லக்னோ நோக்கி வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிக்கிசை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேர் அருகில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.