Publish Date: Mon, 02 Jul 2007 (11:20 IST)
Updated Date: Mon, 02 Jul 2007 (11:19 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெண் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத்தின் பொறியியல் படை பிரிவு தளபதி மேஹா ராஷ்டன். இவர், குஞ்வானி பகுதியில் உள்ள தனது அறையில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண் ராணுவ உயர் அதிகாரின் தற்கொலைக்கான காரணம் இது வரை தெரியவில்லை என்றும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் கோஸ்வாமி தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 02 Jul 2007 (11:20 IST)
Updated Date: Mon, 02 Jul 2007 (11:19 IST)