Publish Date: Sat, 30 Jun 2007 (18:17 IST)
Updated Date: Sat, 30 Jun 2007 (18:17 IST)
மும்பையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது!
மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.
மும்பையில் இருந்து கோவா, பெங்களூரு, சென்னை வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியாவின் உள்நாட்டு போக்குவரத்தான இந்தியன், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் தங்களுடைய மும்பை விமான சேவையை ரத்து செய்துள்ளன.
Webdunia
Publish Date: Sat, 30 Jun 2007 (18:17 IST)
Updated Date: Sat, 30 Jun 2007 (18:17 IST)