ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலின் வேட்புமனுவை விலக்கிக் கொண்டு, வேறு வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொலை வழக்கு ஒன்றில் பிரதீபா பாட்டீலின் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பெண் புகார் கூறியிருப்பதையும், கூட்டுறவு வங்கியில் அவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாரையும் சுட்டிக்காட்டினார்.
பொது வாழ்வில் ஈடுவடுபவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் நாட்டின் உயர்ந்த பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அத்வானி தெரிவித்தார்.
ஜூலை 4 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுவை விலக்கிக் கொள்ள கடைசி நாள் என்பதால், அதற்குள் பிரதீபா பட்டீலுக்கு பதிலாக வேறு யாரையாவது காங்கிரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அப்போது வலியுறுத்தினார்.