நலிவடைந்த நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த மத்திய அமைச்ச்ரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது!
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிப்ரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்சி, மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணி புரியும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) பணி ஓய்வு வயது 62 ஆக இருந்தது, அது தற்போது 3 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டு 65 ஆக உயர்த்த அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், தனியார் நிறுவன தலைமை நிர்வாகிகளுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.