Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செங்கோட்டை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பு

Advertiesment
செங்கோட்டை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பு

Webdunia

, வியாழன், 28 ஜூன் 2007 (15:40 IST)
உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக டெல்லி செங்கோட்டையை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஐ.நா. சபையின் கல்வி, கலை, பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ உலகில் பழமை வாய்ந்த, அதிசயிக்கத்தக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுமானங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து அவைகளை காப்பாற்றி, பராமரித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் செயல்படுகிறது.

இந்த அடிப்படையில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் மற்றும் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் .... கோயில், உதவை மலை ரயில் ஆகியவற்றை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து பராமரித்து வருகிறது.

அந்த பட்டியலில் இந்தியாவின் சரித்திரப் புகழ்பெற்ற டெல்லி செங்கோட்டையையும் சேர்த்துள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ுனெஸ்கோவில் இடம்பெறும் பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் குழு நியூசிலாந்தில் கூடி ுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறவுள்ள பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்தது.

இதில் உலகில் உள்ள நான்கு பாரம்பரிய நினைவு சின்னங்கள் இடம்பெறுகின்றன. அதில் இந்தியாவின் டெல்லியில் உள்ள செங்கோட்டையும் ஒன்றாகும்.

17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டை, அழகிய கலை நயத்துடன் உறுதியான கட்டுமானத்துடனும், கடடட நுணுக்கங்களும், அதனை சுற்றியுள்ள தோட்டகலையும் புகழ் பெற்றவை என்றும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil