Publish Date: Thu, 28 Jun 2007 (12:46 IST)
Updated Date: Thu, 28 Jun 2007 (12:46 IST)
பல்கலைக்கழகம், கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களை விரிவுபடுத்த ரயில்வே துறை முடிவு செய்ய்துள்ளது.
ரயில் நிலையம் அல்லாத இடங்களில், குறிப்பாக மாவட்ட தலைநகரங்களில் தபால் நிலையங்களில் ரயில் பாயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக இரயில்வே அமைச்சருக்கு பொது மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து, ரயில் முன்பதிவு மையங்களை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகம், கல்லூரி வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மேலும், 4 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதி அல்லது 15 கி.மீ. தொலைவிற்கு ஒரு ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க ரயில்வே துறை ஆலோசித்து வருகிறது.