Publish Date: Wed, 27 Jun 2007 (12:55 IST)
Updated Date: Wed, 27 Jun 2007 (12:55 IST)
மேற்கு வங்க மாநிலம் புருளியா மாவட்டத்தில் உள்ள பைராண்டி ரயில் நிலையத்தை மாவோயிஸ்டுகள் தீ வைத்து கொளுத்தி நாசம் செய்தனர்!
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் உலகமயமாக்கல், தொழில்மயமாக்கல், சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகியவற்றை எதிர்த்து பொருளாதாரத் தடைப் போராட்டத்தை நேற்றும், இன்றும் நடத்திவரும் மாவோயிஸ்டுகள், இன்று அதிகாலை பைராண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை அடித்து துரத்திவிட்டு, ரயில் நிலையத்திற்கு தீ வைத்தனர்.
ரயில் நிலையத்தில் இருந்த முக்கிய ஆவணங்களையும் அவர்கள் தீ வைத்து கொளுத்தியதாகவும், ரயில் நிலையம் முழுவதும் தீப்பற்றி எரிந்து முழுமையாக சேதமடைந்துவிட்டதாகவும் ரயில்வே துறையின் துணை வணிக மேலாளர் கே.எஸ். முகர்ஜி கூறியுள்ளார். (யு.என்.ஐ.)