Publish Date: Tue, 26 Jun 2007 (13:19 IST)
Updated Date: Tue, 26 Jun 2007 (13:17 IST)
உத்திரபிரதேச மாநிலம் சொனேபத்ரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் சொனேபத்திரா மாவட்டத்தில் ரந்தா கிராமத்தில் உள்ள பாபினி பகுதியில் மின்னல் தாக்கியதில் 5 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும், 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இதேபோல், தும்ரா கிராமத்தில் உள்ள பிந்தாம்கஞ் பகுதியில் மின்னல் தாகியதில் விவசாயி ஒருவர் பலியாகி இருப்பதாக தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 26 Jun 2007 (13:19 IST)
Updated Date: Tue, 26 Jun 2007 (13:17 IST)