Newsworld News National 0706 26 1070626017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாகாலாந்தில் லேசான நில அதிர்வு

Advertiesment
நாகாலாந்தில் லேசான நில அதிர்வு

Webdunia

, செவ்வாய், 26 ஜூன் 2007 (12:00 IST)
நாகாலாந்தின் திமாப்பூர் பகுதியில் நேற்று இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நாகாலாந்தின் வர்த்தக நகரமான திமாப்பூரில் நேற்று இரவு 11.38 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஒரு சில விநாடிகள் நீடித்த இந்த நில அதிர்வு நகர் முழுவதும் உணரப்பட்டுள்ளது.

கட்டடங்களும், வீடுகளும் அதிர்ந்தன. ஜன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டன. எனினும் வேறு எந்த சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதற்கான தகவல்கள் இல்லை.

நாகாலாந்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் முதல் நில அதிர்வு இது என்பது குறிப்பிடத் தக்கது. நாகாலாந்து பூகம்பம் ஏற்படக் கூடிய வாய்ப்பு குறைந்த இடம் என்று பூகம்பம் தொடர்பான அறிவியல் மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil