Publish Date: Sun, 24 Jun 2007 (14:49 IST)
Updated Date: Sun, 24 Jun 2007 (14:48 IST)
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு காவற்படையினர் சென்ற வாகனம் கண்ணி வெடியில் சிக்கியதில் 10 காவலர்கள் படுகாயமுற்றனர்!
சிறீநகர் - பண்டிப்புரா சாலையில் 12 கி.மீ. தொலைவில் மலூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி மீது சிறப்பு காவற்படை காவலர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கடந்தபோது அந்த குண்டு வெடித்ததாகவும், அதில் 10 காவலர்கள் காயமடைந்ததாகவும், காவற்படை வாகனம் பலத்த சேதமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Webdunia
Publish Date: Sun, 24 Jun 2007 (14:49 IST)
Updated Date: Sun, 24 Jun 2007 (14:48 IST)