Newsworld News National 0706 23 1070623015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆந்திராவில் கன மழை: 35 பேர் பலி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Advertiesment
ஆந்திரா மழை

Webdunia

, சனி, 23 ஜூன் 2007 (13:31 IST)
ஆந்திராவில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நகரங்களில் இருந்து பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குண்டூர் கரிம்நகர், கடப்பா உள்ளிட்ட பல மாவடங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழையினால் இப்பகுதிகளில் போக்குவரத்தும், தொலை பேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் ஆந்திராவிற்கு தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன ஆந்திராவில் இதுவரை மழைக்கு 35 பேர் பலியாகியிருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil