இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டம் சரன் காத் மலை பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென மலையில் இருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
38 பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காஷ்மீர் மாநில தலைநகர் சிறீநகர் அருகே உள்ள கோயிலுக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து இமாசல பிரதேசம் வழியாக சென்ற போது, கங்ரா மாவட்டம் சரன் காத் என்ற பகுதியில் திடீரென நிலைகுலைந்து மலையில் இருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்ட இமாசல பிரதேச போக்குவரத்து துறை அமைச்சர் பாலி தெரிவித்தார்.