குடியரசுத் தலைவர் தேர்தலில் 3ஆம் அணியால் வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் கலாமிற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகளின் வேட்பாளராக பிரதீபா பாட்டீலை நிறுத்தியுள்ள நிலையில், கலாமிற்கு ஆதரவு தருவது குறித்து ஆலோசிக்க இயலாது என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
அப்துல் கலாமிற்கு ஆதரவு கோர தன்னை சந்திக்க நேரம் கேட்ட 3ஆம் அணித் தலைவர்களை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூறி மறுத்துவிட்டார்.
இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும், தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டனர். ஆயினும் அவர்களை இன்று மூன்றாம் அணித் தலைவர்கள் சந்திக்கின்றனர்.