இந்தியப் பெண்கள் முக்காடு போடத் தேவையில்லை என பிரதீபா பாட்டீல் கருத்து தெரிவித்ததற்கு பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ராஜஸ்தான் மாநில ஆளுநரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருமான பிரதீபா பாட்டீல் நேற்று உதய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முகலாயர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே பெண்கள் முக்காடு அணிந்ததாகவும், இந்தியப் பெண்கள் இனி முக்காடு அணியத் தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
இது நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் அமைப்புகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பிரதீபா பாட்டீலின் இந்த கருத்து ஏற்கொள்ள முடியாதென்றும், உண்மையல்ல என்றும் இஸ்லாமிய அமைப்பின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.