உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மோசடி நடந்ததாகக் கூறப்படும் பூர்வாஞ்சல் பல்கலைக் கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடத்துவதற்கு முதலமைச்சர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்
உத்தரபிரதேசத்தில் கடந்த 14ம் தேதி மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 80 மாணவர்கள் எழுதிய தேர்வில் சிலர் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். அதேபோல், லக்னோவில் தேர்வு எழுதிய 16 ஆயிரம் மாணவர்களில் 20 பேர் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்மந்தப்பட்ட பல்கலைக் கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்துவதற்கு முதலமைச்சர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
விடைத்தாள் மறு மதிப்பீடு செய்யப்படும் என்றும் அவர் மாணவர்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.