Newsworld News National 0706 16 1070616006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்திரபிரதேசம்: சாலை விபத்தில் 7 பேர் பலி

Advertiesment
உத்திரபிரதேசம்

Webdunia

, சனி, 16 ஜூன் 2007 (16:02 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் லாரியும், விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் மணிப்பூரி மாவட்டத்தில் உள்ள டன்னஹார் பகுதியில் சிகோஹபாத் தேசிய நெடுஞ்சாலையில் விளையாடுக்காக பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி, வாகனம் திடீரென பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விளையாட்டு வாகன ஓட்டுனர் உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும், இரண்டு பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil