Publish Date: Fri, 15 Jun 2007 (19:01 IST)
Updated Date: Fri, 15 Jun 2007 (19:00 IST)
மூன்றாவது அணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜூன் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெழுங்கு தேச கட்சியின் நாடாளுமன்ற தலைவர் எர்ரான் நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் மாற்றாக மூன்றாவது அணி உருவாகி இருப்பதாகவும், குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவித்த எர்ரான் நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிவிப்பிற்காக தாங்கள் காத்திருப்பதாக கூறினார்.
ஜூன் 18 ஆம் தேதிக்குள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவிட்டுவார் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Fri, 15 Jun 2007 (19:01 IST)
Updated Date: Fri, 15 Jun 2007 (19:00 IST)