Publish Date: Wed, 13 Jun 2007 (19:07 IST)
Updated Date: Wed, 13 Jun 2007 (19:06 IST)
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி அருகே உள்ள சந்தை ஒன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 சிறுவர்கள் உட்பட 42 பேர் காயமுற்றனர்!
புல்லுட் என்ற இடத்தில் உள்ள சந்தையில் சைக்கிள் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாகவும், அந்த இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொருவர் உயிரிழந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமுற்ற 42 பேரில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவித்துள்ள காவல் துறையினர், இத்தாக்குதலை உல்ஃபா நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். (பி.டி.ஐ.)
Webdunia
Publish Date: Wed, 13 Jun 2007 (19:07 IST)
Updated Date: Wed, 13 Jun 2007 (19:06 IST)