Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாவூத் கூட்டாளிகள் மூவருக்கு 5-7 ஆண்டுக் கடுங்காவல்!

தாவூத் கூட்டாளிகள் மூவருக்கு 5-7 ஆண்டுக் கடுங்காவல்!

Webdunia

, புதன், 13 ஜூன் 2007 (16:59 IST)
தெற்கு மும்பையில் சட்டத்திற்குப் புறம்பாக சாரா சஹாரா இரட்டை பல மாடிக் கட்டடங்களை கட்டிய குற்றத்திற்காக தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் 3 பேருக்கு மகாராஷ்ட்ரா சிறப்பு நீதிமன்றம் 5 முதல் 7 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது!

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸ்கார் விடுதலை செய்யப்பட்டார்.

விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக குற்றம் சாற்றப்பட்ட அப்துல் ரஹ்மான் அப்துல் கஃபூர் ஷேக் என்கின்ற ரஹ்மான் பாஸ் (வயது 45) என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 14 லட்சத்து 5 ஆயிரம் அபாரதமும், அப்துல் சத்தார் பாஜி ஜீவா பாய் ராதன்புரா என்கிற சத்தார் டேலி (55), தாரிக் அப்துல் கரீம் மர்ச்சண்ட் என்கின்ற தாரிக் பிரவீன் (32) ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 10 லட்சத்து 5 ஆயிரம் அபாரதமும் விதித்து மகாராஷ்ட்ர மாநில அமைப்பு ரீதியிலான குற்றத்தடுப்பு சட்ட நீதிமன்ற நீதிபதி மிருதலா பக்தார் தீர்ப்பளித்தார்.

இக்பால் காஸ்கார், நரேந்திர ராம்லோச்சான் ராஜ்பார், ஆஸ்முக் பிரவீன் சந்திர ஷா, கிரண் பசந்த் ஆச்சரேகார், மதுக்கர் சால்வேகார், குலாம் நபி ராம்ரான் தன்வார் ஆகிய 7 பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி நீதிபதி விடுதலை செய்தார். (யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil