Publish Date: Wed, 13 Jun 2007 (11:57 IST)
Updated Date: Wed, 13 Jun 2007 (11:55 IST)
குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 19ம் தேதி நடைபெற இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வதில் காங்கிரஸ், பாரதி ஜனதா ஆகிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 19ம் தேதி நடைபெறயிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தேர்தல் தேதி குறித்த அறிக்கை ஜூன் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும் அவர் தெரிவித்தார். ஜூலை 21ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று என்.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
Webdunia
Publish Date: Wed, 13 Jun 2007 (11:57 IST)
Updated Date: Wed, 13 Jun 2007 (11:55 IST)