Publish Date: Mon, 11 Jun 2007 (21:24 IST)
Updated Date: Mon, 11 Jun 2007 (21:24 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்!
நெதர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி வந்தடைந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் நீண்ட நேரம் விவாதித்ததாகவும், இந்த விவாதத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே. அந்தோணி ஆகியோர் உடனிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் அகமது பட்டேலும், அந்தோணியும் பேசி வருகின்றனர். (பி.டி.ஐ.)
Webdunia
Publish Date: Mon, 11 Jun 2007 (21:24 IST)
Updated Date: Mon, 11 Jun 2007 (21:24 IST)