Publish Date: Fri, 08 Jun 2007 (12:21 IST)
Updated Date: Fri, 08 Jun 2007 (12:20 IST)
கோவா மாநில முதலமைச்சராக திகாம்பர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் சமீர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
கோவா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதலமைச்சர் பதவிக்கு நிலவிய போட்டியில் திகாம்பரை கட்சி மேலிடம் முடிவு செய்தது.
இதையடுத்து, நேற்று நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக திகாம்பர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் திகாம்பர் காமத் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு துணை நிலை ஆளுநர் சமீர் பதவி பிரமாணமும், ரசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 3 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
Webdunia
Publish Date: Fri, 08 Jun 2007 (12:21 IST)
Updated Date: Fri, 08 Jun 2007 (12:20 IST)