மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் இருவருக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 713 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்து, அதற்கான தண்டனையை அளித்துவருகிறது.
குண்டு வெடிப்பு தொடர்பாக துபாயில் நடந்த சதிதிட்டத்தில் கலந்து கொண்டதற்காக பதான் என்பருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 2,25,000 அபராதமும் விதித்து தடா நீதிபதி கோடே தீர்ப்பளித்தார்.
அதேபோல், மத்திய மும்பையில் உள்ள எம்சிஜிஎம் தலைமையகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய உமர் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 1,50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.