கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 22 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாதிகள் காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது மட்டுமின்றி, 14 இடங்களில் முன்னணியில் உள்ளது.
கோவா மாநில சட்டமன்றத்திற்கு மொத்தம் உள்ள 40 இடங்களுக்கு கடந்த 2ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 22 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாதிகள் காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களை கைப்பற்றியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளும், சுயேட்சைகளும் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
மீதமுள்ள 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே கோவாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.