கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை வெளிவந்துள்ள முன்னணி நிலவரங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு ஜூன் 2ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி துவங்கியது. இதுவரை முன்னணி நிலவரம் தெரிந்த 22 இடங்களில் 12 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 6 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும், 4 இடங்களில் மற்ற கட்சிகளும் சுயேட்சைகளும் முன்னணியில் உள்ளனர்.
கோவா முதலமைச்சர் பிரதாப் சிங் ரானே, பொரியம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் முதலமை மனோகர் பரிக்கார் பனாஜி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.